மீண்டும் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!
கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24, 25, 26: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை பெய்யக்கூடிய பகுதிகள்:
- குற்றாலம்
- பாபநாசம்
- தென்காசி
- அச்சன்கோவில்
- செங்கோட்டை
- ஆரியங்காவு
- கடனாநதி
- புளியரை
- ராமநதி நீர்ப்பிடிப்பு பகுதிகள்
- மேக்கரை
- மணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள்
- பண்பொழி
இதனால் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply