25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


குரூப் 1-2025  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு  தாட்கோ  சார்பில்  முதன்மை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குரூப் 1-2025  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு தாட்கோ  சார்பில்  முதன்மை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்  தகவல்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1-2025 முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு (Mains Examinations) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1-2025 முதல்நிலைதேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயிலுவதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News