25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்,I A S., அவர்கள் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு  மேற்கொண்டார்.
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

 பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்   நியமிக்கப்பட்டுள்ளார்.இன்றைய தினம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம்,என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவில்லிபுத்தூர் லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பெறப்படும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய   நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடாத வகையில்,  அரசு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்தவாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும்  திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான வாக்காளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பங்கள் அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மாவட்ட தேர்தல் அலுவலருடன் இணைந்து தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும்  திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக வரப்பெற்ற விண்ணப்பங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது  மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி , சிவகாசி சார் ஆட்சியர் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News