பனங்கிழங்குப் பொரியல்
தேவையான பொருட்கள் -பனங்கிழங்கு 4, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு,கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 1 டேபிள் ஸ்பூன்.
பொடிக்க:-மிளகாய் வற்றல் 10, தனியா, கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவல் தலா 1 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன்.
செய்முறை:-பனங்கிழங்கின் தோலை நீக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். ஆறியதும் தோல், நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்குங்கள். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய பனங்கிழங்கு, அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
0
Leave a Reply