சையது மோடி 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடரில் காயத்ரி கோபி சந்த் ,திரீசா ஜோடி சாம்பியன்.
சையது மோடி 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் லக்னோவில் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திரீசா 22, காயத்ரி கோபி சந்த் 22, ஜோடி, ஜப்பானின் கஹோ ஒசாவா, மை டனாபே ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 17-21 என இழந்த இந்திய ஜோடி, பின் அடுத்த இரு செட்களை 21-13, 21-15 எனக் கைப்பற்றியது.
ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2024, 2025) சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியாவின் ஸ்ரீகாந்த் 32, ஹாங்காங்கின் ஜேசன் குனாவன் 21, ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். முதல் செட்டை 16-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2வது செட்டை 21-8 எனக் கைப்பற்றினார்.முடிவில் ஸ்ரீகாந்த் 16-21, 21-8, 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply