25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு-2024-2026 ஆய்வுக்கூட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு-2024-2026 ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,(04.02.2026) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு 2024-2026 ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் திரு.எஸ்.காந்திராஜன்(வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார்(வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), திரு.ஈ.ராஜா(சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்), திரு.இராம கருமாணிக்கம்(திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் திரு.எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) ஆகியோர் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை), பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நெடுஞ்சாலைகள் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை), சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அறநிலையங்கள் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை), இயற்கை வளங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, அதன் பயன், தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறையை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.28 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு  ரூ.16,196 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டியினையும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3000 மதிப்பில் தார்பாலினையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.72,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.60,210 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.4.80 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News