25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (01.08.2025) வணிகவரித்துறை சார்பில், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் வாயிலாக சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST)  சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் ஆண்டிற்கு விற்று முதல் (Turnover) ரூ.40 இலட்சத்திற்கு குறைவாக உள்ள வணிகர்கள் வணிகர் நல வாரியத்தின் பலனை பெறும் வகையில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத் தொகையான ரூ.500/- ஐ செலுத்துவதிலிருந்து 01.06.2025 முதல் 30.11.2025 வரையிலான ஆறு மாத காலத்திற்கு விலக்களிக்கப்படுகிறது. தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

வணிகர் நலவாரியத்தில் ரூ.40 இலட்சத்திற்கு கீழ் வணிகம் செய்யும் அனைத்து வணிகர்களும் கட்டணமில்லாமல் உறுப்பினர்களாக சேரலாம். மற்ற வணிகர்கள் ரூ. 500 கட்டணத்துடன் சேரலாம். ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் பதிவு எண் பெற்ற வணிகர்கள் மற்றும் GSTIN பெறாத வணிகர்கள் உறுப்பினராக சேரலாம். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முகவரிச் சான்று, தொழில் உரிமம் சான்று (உள்ளாட்சி, MSME UDAYAM, உணவு பாதுகாப்புத் துறை) உள்ளிட்ட விவரங்களை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.வணிகர் நலவாரியத்தில் சேர்க்கை பெறும் உறுப்பினர்களுக்கு குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, உறுப்பினரின் வாரிசுகளுக்கு விளையாட்டு நிதியுதவி, தீ விபத்து நிவாரண உதவி, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, திருமண உதவித்தொகை, விபத்துக்கால உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான மேலும் விபரங்களுக்கு இணை ஆணையர் (மாநில வரி), விருதுநகர் கோட்டம், துணைஆணையர் (மாநில வரி) விருதுநகர், ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள், மதுரை ரோடு, விருதுநகர்-626001, துணை ஆணையர்(மாநில வரி) சிவகாசி ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள், ரிசர்வலைன், சாட்சியாபுரம் சிவகாசி- 626124 ஆகிய முகவரிகளிலும், www.tn.gov.in/tntwb    என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு வணிகர்கள் இந்த தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர்(சென்னை) திரு.ஆ.பா.தேவேந்திர பூபதி அவர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார்.மேலும், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான வணிகர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்(சென்னை) திரு.ஆ.பா.தேவேந்திர பூபதி, விருதுநகர் கோட்ட இணை ஆணையர்(மாநில வரி) திரு.சே.மாரியப்பன், விருதுநகர் துணை ஆணையர்(மாநில வரி) திரு.அ.மகபூப் இப்ராகிம், விருதுநகர் உதவி ஆணையர்(மாநில வரி) திருமதி செ.செல்வ பிரியா, விருதுநகர் மாநில வரிகோட்ட அனைத்து தலைமை அலுவலர்கள், சிறு, குறு வணிகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News