குழந்தையை புடவை தொட்டிலில் தூங்க வைக்க வேண்டும் . அறிவியல் உண்மை.
தாயின் வயிற்றில் பனிக்குட நீரில் நீந்தி பழகிய குழந்தை, தாய் நடக்கும் போதும் உடல் அசைவின் போதும் ஊஞ்சலாட்டத்தை கருவறையில் உணரும். அந்த இருட்டும், கதகதப்பும், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்.
புடவைத்தொட்டில் அசையும்போது, குழந்தை தன் தாயின் கரு அசைவுகளை அதில் உணர்ந்து ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் இடையில் தூக்கம் இடறினாலும், குழந்தை தொல்லையின்றி தூக்கத்தை தொடர, பாரம்பரிய புடவைத் தொட்டிலே சிறந்தது என பிசியோ தெரபி மருத்துவர்கள் கூறுகின்றார். இதை நம் முன்னோர்கள் அறிந்து பயன் இத்தியுள்ளார்.
தொட்டிலில் குழந்தையிட்டு ஆட்டும் பொழுது, குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறுகள் சரியாகிவிடும் எனவும், குழந்தைக்கு கழுத்து வலி வராமலும் இருக்கும். புடவை தொட்டிலில் படுக்க வைக்கும்போது, குழந்தையின் தலைப்பகுதி ஒரு மென்மையான அழுத்தம் பெறுகிறது. இது ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
0
Leave a Reply