தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் (16.02.2026) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வட்டார அளவிலான "விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை" காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்."தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS Project) என்பது உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ஒரு மாநில அளவிலான முன்னோடித் திட்டமாகும். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எளிதாக்குதல், அவர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல், மற்றும் உரிய நேரத்தில் தேவையான நபர்களுக்குத் தகுந்த உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், 13 வட்டார மையம் மற்றும் 3 வருவாய் கோட்ட அளவில் "விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்க உள்ளது. அதில், முதற்கட்டமாக அருப்புக்கோட்டையில் ரூ.16 இலட்சத்து 22 மதிப்பிலும், காரியாபட்டியில் ரூ.16 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலும், இராஜபாளையத்தில் ரு.11 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும், நரிக்குடியில் ரூ.15 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலும், வெம்பக்கோட்டையில் ரூ.15 இலட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலும், விருதுநகரில் ரு.20 இலட்சத்து ஏழாயிரம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள 6-வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் மொத்தம் 27,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில், அருப்புக்கோட்டை ஊராட்சியில் 2,733 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உயர்தர மருத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு என மொத்தம் 16-சேவை மையத்தினை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இச்சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். சமுதாயத்தில் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு மொத்தம் 6-பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சை மூலம் தசை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு உள்ளவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி சிகிச்சைகள் அளிக்கப்படும். உளவியல் ஆலோசனை (Psychological Counseling) மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.
மொழி மற்றும் பேச்சு தெரபி (Speech Therapy) மூலம் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பேசும் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்படும். சிறப்புக் கல்வி (Special Education) மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த, அவர்களின் தேவைக்கேற்ற பிரத்யேகக் கல்வி முறைகள் கற்பிக்கப்படும்.நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மாவட்டத்திற்கு இச்சேவை மையம் அமைவதற்கு ஏறத்தாழ ரூ.93 இலட்சத்து 59 ஆயிரம் வழங்கியுள்ளார்.எனவே, குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைவதற்கு தேவையான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக செய்து வந்துள்ளார். இதனை, பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.செந்தில்வேல், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply