25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று(26.12.2025) அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த உண்டு உறை விட பயிற்சியானது 15 நாட்கள் வரை வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் இப்பயிற்சி வகுப்பிற்கு வந்திருக்கலாம். போட்டி என்பது இங்கிருக்கும் உங்களுக்குள் அல்லாமல் போட்டித் தேர்விற்கு தயாராகும் அனைவருடனான ஒரு போட்டியாக இருக்க வேண்டும்.மாணவர்கள் பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு தங்களுக்குள்ளே கலந்துரையாட வேண்டும். நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.இன்றைய காலத்தில் நாம் அறியாமலே பல்வேறு கல்லூரிகள் உள்ளன.  அக்கல்லூரிகளில் நுழைவதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் பல்வேறு அரசுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார்படுத்தி கொள்வது? எவ்வாறு விண்ணப்பிப்பது போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஒரு பாடத்தில் எவையெல்லாம் முக்கியமான தலைப்புகள் என்று ஆராய்ந்து படிக்க வேண்டும். இனிவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானவை. மேலும், மாணவர்களுக்கு தேவையான உரிய வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.
இதனை உரிய வழியில் பயன்படுத்தி மாணவர்களாகிய நீங்கள் பயனடைய வேண்டும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தினை உணர்ந்து இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் பயிற்சியினை வழங்கலாம். ஆனால், மாணவர்களாகிய நீங்கள் நல் ஒழுக்கத்துடன் நன்றாக படிக்க வேண்டும். மாணவர்களின் இந்த நேரம் தான் தங்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே மாற்றக்கூடிய தருணம். மதிப்பெண்களை பொறுத்து மாணவர்கள் எதிர்பார்த்த கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் அமையும். எனவே, மாணவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார். அரசுப்பள்ளியில் பயிலும் எங்களுக்கும், இந்திய அளவிலான தலைசிறந்த கல்லூரிகளில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகளையும்  வழங்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்ஃபான், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் 80 அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News