25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின் வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்  திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின் வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் (01.01.2026) கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின்வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள்  திறந்து வைத்தார்.  கலைஞர் கனவு இல்லம் திட்டமானது 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,  2025 க்குள் தமிழகத்தில் 1 இலட்சம் குடிசையில்லா வீடுகள் ஏற்படுத்துவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு வீட்டுவசதி அலகிற்கும் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் நான்கு தவணைத் தொகைகளாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 357 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 243 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 277 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 124 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 321 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 214 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 48 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 96 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகளும் என மொத்தம் 2234 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டு வருகின்றன.

  தற்போது, அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்,ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில்  கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின்வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திறந்து வைத்தார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயன்பெற்ற திருமதி ஆகாசவாணி என்ற  பயனாளி,  சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், எனக்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கி, வீடு கட்டி முடிக்கப்பட்டு, தற்போது எனக்கான சொந்த வீட்டு  கனவை நனவாக்கிய  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனது உணர்ச்சி பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்வில்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News