25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு தகுதித்தேர்வு சேர்க்கை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு தகுதித்தேர்வு சேர்க்கை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இத்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026, பருவத்தில் 8- ம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் சென்னை உட்பட குறிப்பிட்ட சில-மையங்களில் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும், எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களைக் கொண்டது.

கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை - ‘கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட்-248 003” என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின், இணையவழியான www.rimc.gov.in    மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வரைவோலை மூலமாக(By sending Demand Draft) பெற கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து ‘கமாண்டண்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி டேராடூன்” அவர்களுக்கு வரைவோலைக்குரிய கிளை எச்.டி.எப்.சி. வங்கி, பல்லூபூர் சௌக்,  டேராடூன் (வங்கி குறியீடு -1399) உத்தரகாண்ட்டில் செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினர் ரூ.600- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கான வரைவோலையை அனுப்பி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இணையவழி மூலம் (on-line payment)  இராஸ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in  மூலமாக பொதுப் பிரிவினர் ரூ.600- யையும் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு ஆகியவை விரைவு அஞ்சல் வாயிலாக இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகாண்ட் டேராடூன். உத்தரகாண்ட் 248 003 லிருந்து அனுப்பப்படும்).

குறிப்பு:
    கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன். உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248-003 என்ற முகவரியை அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் தொடர்பு எண்ணைத் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அனுப்புதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவங்கள். ஒளிநகல் எடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

அஞ்சல் துறையின் தாமதத்திற்கு இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி பொறுப்பல்ல. தவறான அல்லது முழுமையடையாத முகவரியால் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு போக்குவரத்தில் ஏற்படும் அஞ்சல் துறையின் தாமதம் அல்லது இழப்புக்கு இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி பொறுப்பேற்காது.எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பக் கட்டணம் திரும்பச் செலுத்தப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமியர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2026 அன்று 11 ½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-01-2013-க்கு முன்னதாகவும் 01-07-2014 - க்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது. அதாவது 01-01-2026- ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் (Recognized School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டிப்பு படியுடன்) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு 31.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதள சேவையினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News