”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான இன்று (20.08.2026) அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கள ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்று 19.08.2026 காலை 09.00 மணி முதல் இன்று 20.08.2026 அன்று காலை 09.00 மணி வரை பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன் படி இரண்டாம் நாளான (20.08.2026) அதிகாலை திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் நகராட்சியின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும், திருவில்லிபுத்தூர் உழவர் சந்தை மற்றும் எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில் திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர், குடிநீர், வடிகால் வாரியம் அலுவலர்கள், திருவில்லிபுத்தூர் நகராட்சி வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply