வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் நேரில் சென்று ஆய்வு .
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முத்துராமலிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா நாயக்கன்பட்டி இந்து நாடார் சத்திரிய வித்யாசாலா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் (27.12.2025)வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதைமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2025 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, (27.12.2025) மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
அருப்புக்கோட்டை வட்டம், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முத்துராமலிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா நாயக்கன்பட்டி இந்து நாடார் சத்திரிய வித்யாசாலா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் இன்று(27.12.2025)
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதைமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம்
அளிக்கலாம்.
மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 -ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும்.இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம்.எனவே, இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பங்களை அளித்து, தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறுமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply