தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா: திவ்யா, விதித் உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது.
சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான 2025-ம் ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா, டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா' விருது இம்முறை யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. அர்ஜுனா விருது மட்டும் 17 பேருக்கு வழங்கப்பட்டது.
அர்ஜுனா விருது: உலக கோப்பை செஸ் சாம்பியனான முதல் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், 2024 செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்க அணியில் இடம்பெற்ற விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, 2023 ஆசிய விளையாட்டு 'டெகாத்லான்' வெள்ளிப் பதக்க வீரர் தேஜஸ்வின் ஷங்கர் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
பிற அர்ஜுனா விருதாளர்கள்: பிரியங்கா, முகமது அஜ்மல் (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), ராஜ்குமார் பால், லால் ரெம்சியாமி (ஹாக்கி), சுர்ஜீத், பூஜா (கபடி), அகில் ஷியரோன் (துப்பாக்கிசுடுதல்), ஏக்தா பயான் (பாரா தடகளம்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காது கேளாதோர் துப்பாக்கிசுடுதல்), ருத்ரான்க்ஷ் (பாரா துப்பாக்கிசுடுதல்) உள்ளிட்டோரும் இவ்விருதைப் பெற்றனர்.
வாழ்நாள் சாதனையாளர் (அர்ஜுனா): முன்னாள் கால்பந்து வீரர் அருமைநாயகத்திற்கு (84) வாழ்நாள் சாதனையாளருக்கான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
துரோணாச்சார்யா விருது: சிறந்த பயிற்சியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை தர்மேந்திர யாதவ் (குத்துச்சண்டை), விரேந்தர் குமார் (மல்யுத்தம்) ஆகியோரும், வழக்கமான பிரிவில் பர்வீர் சிங் (தடகளம்), சோட்டே லால் யாதவ் (குத்துச்சண்டை) உள்ளிட்டோரும் பெற்றனர்.
0
Leave a Reply