25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


மாம்பூக்கள் மா மரங்களில் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்என விவசாயிகள் எதிர்பார்ப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாம்பூக்கள் மா மரங்களில் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்என விவசாயிகள் எதிர்பார்ப்பு .

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி ஸ்ரீவில்லிபுத்துார் வத்திராயிருப்பு மாமரங்களில் பரவலாக மாம்பூக்கள் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் பூத்த பூக்கள் பாதிப்பின்றி விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள்  எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, அல்போன்சா, சப்போட்டா போன்ற மா சாகுபடி ஸ்ரீவில்லிபுத்துார்தாலுகாவில் மம்சாபுரம், செண்பகத்தோப்பு, பந்தபாறை, திருவண்ணாமலை பகுதிகளிலும், வத்திராயிருப்பில் புதுப்பட்டி, கான்சாபுரம், அத்திகோயில், பிளவக்கல் அணை, தாணிப்பாறை பகுதிகளில் மா சாகுபடி ஏராளமான ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் அதிகளவில் நடந்து வருகிறது. 

அதிக குளிர் மற்றும் மழை, தேன் நோய் பாதிப்பினால்  கடந்த ஆண்டு மா விளைச்சல் சிறப்பாக இல்லாமல் விவசாயிகள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்கழி கடைசியில் துவங்கி தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளது.இன்னும் இரு வாரங்களில் காய் பிடித்து மே மாதம் முதல் மாம்பழ சீசன் துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News