அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தில் அமைச்சர்அவர்கள் மருத்துவ சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.30.35 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கூடுதல் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டடத்தில் மருத்துவ சேவையினை குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்தும், மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் ஊரின் விரிவாக்கம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்ததால், சீவலப்பேரியில் இருந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்த காரணத்தினால், அருப்புக்கோட்டை பகுதிகளில் தினசரி தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்கிறது.மேலும், வைகையில் இருந்து கிடைக்கக்கூடிய குடிநீரை சுத்திகரித்து வழங்கும் வகையில், கட்டங்குடியில்குடிநீர்சுத்திகரிப்புமற்றும்நீரூற்றுநிலையம்அமைக்கும்பணிகள்மேற்கொள்ளப்பட்டு,அதுவிரைவில்பயன்பாட்டிற்குதொடங்கிவைக்கப்படவுள்ளது.இந்த அருப்புக்கோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதோடு, வடிகால் அமைப்பு மற்றும் வாறுகால் அமைப்பு முறைகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மக்களிடம் செல் மக்களோடு வாழ் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். நான் உங்களோடு இருக்கின்ற காரணத்தினால்தான், இந்த பகுதி மக்களின் குறைகளை தெரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்து வருகிறேன்.
நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் ஆகிய இரண்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்கள் அவர்களும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளனர்.அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் 6 தளங்களுடன் மொத்தம் 8001.00 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.அதன்படி தரைத்தளத்தின், அதி தீவிர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பிரிவு 6 படுக்கைகள், வைப்பு அறை மற்றும் பணி செவிலியர் அமர்வு அறை, நுண் கதிர் வீச்சு பிரிவு, மருந்தகம், உள்நோயாளிகள் 18 படுக்கைகள் பிரிவு, காவலர் அறை, உடல் பரி சோதனை அறை, பணி மருத்துவர் அறை, மருந்து பொருட்கள் வைப்பு அறை, ஊசி போடும் அறை, ஆண்கள் பரிசோதனை அறையும்,
முதல்தளமான தாய் சேய் நல பிரிவில், காய்ச்சல் பிரிவு, நோயாளிகள் தயார் படுத்தும் அறை, மருந்து பொருட்கள் வைப்பு அறை, குழந்தைகள் பிரிவு, பணி செவிலியர் நிலையம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, செவிலியர் ஒய்வு அறை, பிரசவத்திற்குப் பிந்தைய தாய் பிரிவு, தாய் பால் வங்கி, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், இரண்டாம் தளத்தில், கார்ப்பிணிகள் பிரிவு, செவிலியர் அறை, நோயாளிகள் தயார் படுத்தும் அறை, இரத்த சுத்திகரிப்பு பிரிவு, இரத்த வங்கியும்,மூன்றாம் தளத்தில், நூலகம், பணி செவிலியர் அறை, மருத்துவர்கள் அறை, அலுவலகம், ஆவணபாதுகாப்பு அறை, இளநிலை நிர்வாக அலுவலர் அறை, அலுவலக கண்காணிப்பாளர் அறை, நிலைய மருத்துவ அலுவலர் அறை, மருத்துவ அலுவலர் அறையும், நான்காம் தளத்தில், பெண்கள் காய்ச்சல் பிரிவு, செவிலியர் அமர்வு அறை, பணி செவிலியர் ஒய்வு அறை, பொது மருந்துவ பெண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பெண்கள் பிரிவு, பெண்கள் சிகிச்சை கட்டண அறையும்,ஐந்தாம் தளத்தில், ஆண்கள் காய்ச்சல் பிரிவு, செவிலியர் அமர்வு அறை, பணி செவிலியர் ஒய்வு அறை, பொது மருந்துவ ஆண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை ஆண்கள் பிரிவு, ஆண்கள் சிகிச்சை கட்டண அறையும்,ஆறாம் தளத்தில், அறுவை சிகிச்சைக்கு பின் மயக்க தெளிவு அறை, அறுவை சிகிச்சைக்கு நோளாளிகள் தயார்படுத்தும் அறை, அறுவை சிகிச்சைக்கு பின் ஆண் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் பெண் பிரிவு, செவிலியர் அறை,உடைமாற்றும்அறை,அறுவைஅரங்கமும்எனபல்வேறுவசதிகளுடன்அமைக்கப்பட்டுள்ளது.இக்கட்டிடங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இக்கட்டிடங்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்பது கிராமப்புற மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது. மருத்துவ சேவைகளுக்கு குறிப்பாக உயர் மருத்துவ சேவைகளுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தது. தற்போது இந்த பகுதியிலேயே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டு, அதற்கான கட்டட வசதிகள், உபகரணங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும். இதனால் இப்பகுதி மக்கள் விருதுநகர் வரை செல்லாமல் அருகிலேயே உள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற முடியும். இதனால் நேரமும், பண விரயமும் மிச்சமாகும் என இப்பகுதிகள் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
0
Leave a Reply