25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிகளுக்கு    நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்   அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிகளுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வடமலையாபுரம் சோதனைச் சாவடி அருகில் இன்று (03.03.2025) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,  ரூ.120 கோடி மதிப்பில், திருவில்லிபுத்தூர் - சிவகாசி   சாலையை சிவகாசி -  விருதுநகர் சாலை உடன் இணைக்கும் சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும்  சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள்,  ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட சாலை அமைப்பதற்கான ஒரு கட்டமாக இன்று ரூ.120 கோடி மதிப்பில்  திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையை  சிவகாசி - விருதுநகர் சாலை உடன் இணைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சிவகாசி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

தற்போது சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிவகாசி வெளிப்புற சுற்றுச்சாலை அமையவுள்ள சாலையின் மொத்த நீளம் 33.520 கி.மீ ஆகும். இதனால் திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலை விருதுநகர் சிவகாசி -சாலை, சாத்தூர் சிவகாசி கழுகுமலை சாலை சிவகாசி ஆலங்குளம் சாலை,  சிவகாசி எரிச்சநத்தம் சாலை, சிவகாசி - கன்னிசேரி சாலை மற்றும் விஸ்வநத்தம் வெங்கடாசலபுரம் - சாலை உள்ளிட்டவை சுற்றாக இணைக்கப்படும்.இதில் கீழத்திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் இரயில் தண்டவாளங்கள் செல்வதால், அந்த இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்க இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.தற்போது வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, கீழத்திருத்தங்கல், அனுப்பன்குளம், நாரணாபுரம், கொங்கலாபுரம் ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கு நில ஒப்படைப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் பாலம் வரை 9.92 கி.மீ. சாலை அமைக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியானது திருவில்லிபுத்தூர்- சிவகாசி சாலை முதல் சிவகாசி எரிச்சநத்தம் சாலை மற்றும் சிவகாசி - எரிச்சநத்தம் சாலை முதல் சிவகாசி விருதுநகர் சாலையை இணைக்கிறது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News