சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில், புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் (05.05.2025) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வசிக்க கூடிய பொதுமக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வகையில், மின்சாரத்துறையின் நிர்வாக கட்டமைப்புகளை மேம்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான, தங்கு தடையின்றி மின்சார சேவைகளை வழங்கும் விதமாக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.
நமது விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில், புதிய சாத்தூர் மின் பகிர்மான கோட்டம் உருவாக்கப்படும் என சட்டமன்ற மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.அதன்படி, 05.05.2025 முதல் சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய சாத்தூர் கோட்ட அலுவலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதியதாக உதயமாகியுள்ள இக்கோட்டத்தின் கீழ் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட பிரிவு அலுவலகங்கள், N.சுப்பையாபுரம், உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட N.சுப்பையாபுரம் மற்றும் ஏழாயிரம்பண்ணை ஆகிய பிரிவு அலுவலங்கள், ஆலங்குளம் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட ஆலங்குளம், கீழராஜகுலராமன், கல்லமநாயக்கன்பட்டி ஆகிய பிரிவு அலுவலங்கள், ஊரகம்/சிவகாசி உபகோட்டத்திற்குட்பட்ட வெம்பக்கோட்டை பிரிவு அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம்/இராஜபாளையம் உபகோட்டத்திற்குட்பட்ட ஆசிலாபுரம் பிரிவு அலுவலகம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, மேற்படி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் தொடர்பான செயற்பொறியாளர் அலுவலக பணிகளுக்கு புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, மேற்பார்வை பொறியாளர்(தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், விருதுநகர் வட்டம்) திருமதி.ப.லதா, தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள் திரு.எஸ்.முத்துராஜ்(ராஜபாளையம் கோட்டம்), திருமதி.பா.பத்மா(சிவகாசி கோட்டம்), திரு.அ.ஷாஜகான்(சாத்தூர் கோட்டம்) ,சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply