25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 18.04.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு மையங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 18.04.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு மையங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 23.04.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 18.04.2026 அன்று கீழ்காணும் மையங்களில் இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

202-இராஜபாளையம்:-பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி

203-திருவில்லிபுத்தூர்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம்

204-சாத்தூர்: எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி

205-சிவகாசி: எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளி

206-விருதுநகர்: கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

207-அருப்புக்கோட்டை: தேவாங்கர் கலைக்கல்லூரி

208-திருச்சுழி: சேது தொழில் நுட்ப பயிலகம்

 எனவே, மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களாக(நிலை 1, 2, 3) நியமிக்கப்பட்டுள்ள அனைத்து 9,604 அலுவலர்களும், தாங்கள் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மையங்களிலேயே 18.04.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பயிற்சி நடைபெறும் மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக தனியே தபால் வாக்குப்பதிவு சேவை மையம் ஏற்படுத்தப்படும். மேற்படி மையத்தில் படிவம்-12ல் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படும்.

அலுவலர்கள் தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து தபால் வாக்குச் சீட்டை பெற்றுக் கொண்டு வாக்குச் சாவடி மையத்தில் தபால் வாக்கு அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News