உறுதியான கட்டுமானத்திற்குகடற் பஞ்சுகளின் எலும்புக் கூடு .
நாம் கட்டடத்தில் பயன்படுத்தும் சாதாரண பொருட்களையே சற்று மாற்றி வடிவமைத்தால் வலிமையை அதிகரிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி., பல்கலை கண்டறிந்துள்ளது.
பொதுவாக மனித இனம் இயற்கையில் உள்ள விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து அவற்றை தமக்குத் தகுந்தாற் போல் பயன்படுத்தி வருகிறது.
ஆர். எம்.ஐ.டி., பல்கலை விஞ்ஞானிகள் வீனஸ் ப்ளவர் பாஸ் கெட்' எனும் ஒரு வகை கடற்பஞ்சுகளின் எலும்புக் கூட்டை ஆராய்ந்த னர். அதில் இருக்கும் பின்னல் மாதிரியானஅமைப்பால் தான் இந்தக் கடற்பஞ்சு இவ்வளவு வலிமையுடன் இருக்கிறது என்பதை உணர்ந்தனர்.
இவற்றின்மீதுஎப்பேர்ப்பட்டவிசையைச்செலுத்தினாலும்அவற்றைச்சரிசமமாகப்பிரித்துவிடுவதால்இவைஉருமாறாமல், நிலைகுலையாமல் இருக்கின்றன என்பது ஆய்வில் தெரிந்தது.
எனவே,தெர்மோ பிளாஸ்டிக் பாலியுரி தேன் எனும் ஒருவகை நெகிழியை 3 டி பிரின் டிங் முறையில் கடற் பஞ்சுகளின் எலும்புக் கூட்டின் அதே வடிவில் உருவாக்கினார்கள்.
இது மற்ற வடிவங்களை விட வலிமையுடன் இருந்தது. இதேபோல் இரும்புக் கம்பிகளை வடிவமைத்து அவற்றைக் கட்டடங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதே வடிவமைப்பில் மருத்துவ, விளை யாட்டு, பாதுகாப்புக் கருவிகளை உருவாக்க முடியும்.
0
Leave a Reply