25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


டி.என்.பி.எல். 2026: நெல்லை அபார வெற்றி, மதுரை த்ரில் சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டி.என்.பி.எல். 2026: நெல்லை அபார வெற்றி, மதுரை த்ரில் சாதனை.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் சேப்பாக்கம் மற்றும் நெல்லை அணிகள் மோதின.

டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

205 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 17.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மற்றொரு லீக் போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மதுரை அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து, கடைசி கட்டத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News