தக்காளி சூப்.
தேவையான பொருட்கள்:
3 ஆப்பிள் தக்காளி,5பல் பூண்டு,1டீஸ்பூன் மிளகு பொடி
1டேபிள்ஸ்பூன் சோள மாவு,1/2 டீஸ்பூன் உப்பு,
1டேபிள்ஸ்பூன்(வெண்ணெய்,1/2 கப் பிரட் துண்டுகள்,
1டேபிள்ஸ்பூன் பார்ஸ்லி,வெங்காயத்தாள்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் தக்காளியை சேர்த்து வேக வைக்கவும்.
மிக்ஸ்சி ஜாரில் வெந்த தக்காளியை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பட்டர் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டுசேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
ஒரு தவாவை ஸ்டவ்வில் வைத்து பட்டர் சேர்த்து,ரொட்டி துண்டுகளை சேர்த்து வறுத்துவைத்துக்கொள்ளவும்.
பின்னர் மைதா மாவில் தண்ணீர் கலந்து, தக்காளி கலவையில் சேர்த்து கொதித்ததும்,நறுக்கிய பார்சலி இலைகள்,மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும், கொஞ்சம் கெட்டியாகி விடும். அப்போது இறக்கினால்தக்காளி சூப் தயார்.
தயாரான சூப்பை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து மேலே நறுக்கிய வெங்காயத்தாள்,பார்சலி,வறுத்து வைத்துள்ள ரொட்டித் துண்டுகள் சேர்த்து சுவைக்கவும்.
இப்போது மிளகு காரத்துடன் மிகவும் சுவையான தக்காளி சூப்.
0
Leave a Reply