25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


தாட்கோ மூலம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாட்கோ மூலம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாடு ஆதிதிராவிடர்  வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின்  மேம்பாட்டுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்  அடிப்படையில் தாட்கோ, மற்றும்  தகவல் தொடர்பு தொழில்நுட்பக்  கழகம் (ICT Academy) இணைந்து  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, சென்னை  மாவட்டத்தில்  மென் பொருள், வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும்,  கோயம்புத்தூர் மாவட்டத்தில் மென் பொருள், வலைதளம் வடிவமைப்பாளர்,  பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி  நிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் பயிற்சியும்,  மதுரை மாவட்டத்தில்  தரவுப் பகுப்பாய்வாளர், மென் பொருள் வடிவமைப்பாளர், நுண்நிதி  நிர்வாகம்  மற்றும் காப்பீட்டு முகவர்  போன்ற  பயிற்சிகள்  வழங்கப்படவுள்ளது.

மென் பொருள் சார்ந்த பயிற்சி பெற இளங்கலை பொறியியல் மற்றும்  பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம்  பெற்று இருக்க வேண்டும்.  நிதி சார்ந்த பயிற்சிகள் பெற இளங்கலை வணிகவியல்  மற்றும்  இளங்கலை வணிக  நிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம்  பெற்று இருக்க வேண்டும்.  இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும்,   வயது வரம்பு  18 முதல் 35 வயதிற்குள்ளும்,  மற்றும்  குடும்ப  ஆண்டு  வருமானம்  ரூ,3.00  லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி  சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியினை முழுமையாக  முடித்த  இளைஞர்களுக்கு  சான்றிதழ்  மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு  வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com)  என்ற முகவரியில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள்தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News