25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மாவட்டம்  பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM –YASASVI கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S. , அவர்கள் தகவல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM –YASASVI கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I.A.S. , அவர்கள் தகவல்

 இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC,  & DNT students  கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal)  விண்ணப்பிக்கலாம்.

 அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.  2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க  பட்டியலிடப்பட்ட ( Top Class Schools)  பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை  வழங்கப்பட உள்ளது.

                இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு  ரூ. 2.50 இலட்சம்

                இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 15.10..2025

                கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ள நாள்:31.10..2025

புதுப்பித்தல்:

                இத்திட்டத்தின் கீழ் கடந்த  நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National   Scholarship Portal) Renewal Application  என்ற இணைப்பில் (Link)   சென்று OTR  Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல்                     ( Renewal)  மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 புதியது: 

                இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR  Number & Password  பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

                மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application)  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

                மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய  முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம்.

கல்வி நிறுவனங்கள் மாணவ,மாணவியர்கள்விண்ணப்பித்துள்ளவிண்ணப்பங்களைதேசியகல்விஉதவித்தொகை இணையதளத்தில்  பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்டபிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்குஅனுப்புதல்வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential  சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.  

இத்திட்டம் தொடர்பான கூடுதல்  விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை  NSP (https://scholarships.gov.in) இணையதளத்தில்  அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News