25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர்திவ்யா,அர்ஜுன், வைஷாலி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர்திவ்யா,அர்ஜுன், வைஷாலி வெற்றி.

உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று துவங்கி,.முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. ஓபன் பிரிவில் இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, அபிமன்யு, இனியன், பிரனேஷ், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர்.

முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் மக்சிமை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா, 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன், பிரான்சின் மார்கோ மடேரியாவை சந்தித்து 53 நகர்த்தலில் வென்றார். 

கனடாவில் ரோட்ரிகு ,உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ்,  மோதிய போட்டி 'டிரா' ஆனது. 

 3 வெற்றி பெற்ற அர்ஜுன் (3.0), கார்ல்சன் (3.0) முதல் 3 சுற்று முடிவில் முதலிடத்தில் இருந்தனர்.

 இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, சாவித்ரி உட்பட  141 பேர் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் வைஷாலி, ரஷ்யாவின் அலியாக்சாண்ட்ராவை 43 வது நகர்த்தலில் வென்றார். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் குயான்யுனை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News