உலக யூத் செஸ்: பிரதிதீக்கு வெள்ளிப் பதக்கம்.
இத்தாலியில் நடைபெற்ற உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பிரதிதீ போர்டோலோய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 104 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரதிதீ போர்டோலோய், சரண்யா தேவி உள்ளிட்டோர் களமிறங்கினர்.
11 சுற்றுகளில் 7 வெற்றிகளும், 4 டிராக்களும் பெற்ற பிரதிதீ, ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply