25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக நவீன வாசக்டமி இரு வார விழிப்புணர்வு முகாம் – 2025 விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக நவீன வாசக்டமி இரு வார விழிப்புணர்வு முகாம் – 2025 விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (21.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் குடும்பநலத் திட்டம் 1956 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தாய் சேய் நல விகிதத்தை மேம்படுத்துவதும், பிறப்பு விகிதத்தை குறைப்பதும் முக்கிய குறிக்கோள் ஆகும்.குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு  முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.  குடும்பநலத் திட்டம் மக்கள் திட்டமாக செயல்படுவதால்  சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் மக்கள் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டமாக  விளங்குகிறது. 

                     தமிழ்நாட்டில் பொதுவாக பெண்களே குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. ஆண்களும் எளிய பாதுகாப்பான முறையில்  கருத்தடை செய்து கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஆண்களுக்கு ஏற்படும் பொருட்டு வருடந்தோறும் நவம்பர் 21முதல்27வரைவிழிப்புணர்வுவாரமாகவும்நவம்பர்28முதல்டிசம்பர்04வரைசேவைவழங்கும்வாரமாகவும்கடைபிடிக்கப்படுகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.  இதன் பொருட்டு விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்பநல கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்ளும் பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை ரூ.1100/- மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3900/- சேர்த்து மொத்த ஊக்கத்தொகை ரூ.5000/- வழங்கப்படும்.ஆண்களுக்கான தழும்பில்லா நிரந்தர கருத்தடை சிகிச்சை முறை சேவையை தகுதி வாய்ந்த ஆண்கள் எளிதில் பெறும் வகையில் வருகின்ற 27.11.2025 வியாழக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்  சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்பதில்லை.  5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை. இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம்.

           எனவே, அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளலாம். கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும் முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  துணை இயக்குநர்(குடும்பநலம்) (பொ) மரு.இராஜன், மாவட்ட குடும்ப நல அலுவலர்கள், மருத்துவப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News