25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


காமன்வெல்த் தொடக்க விழாவில் மீராபாய் – லவ்லினாவுக்கு சிறப்பு கவுரவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் தொடக்க விழாவில் மீராபாய் – லவ்லினாவுக்கு சிறப்பு கவுரவம்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ள 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில், இந்திய அணியின் தேசியக் கொடியை ஏந்தும் பெருமை ஒலிம்பிக் பதக்க வீராங்கனைகளான மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

74 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் 10 விளையாட்டுகள், 215 பதக்கப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்க விழா கிளாஸ்கோவின் ஓ.வி.ஓ. ஹைட்ரோ அரங்கில் நடைபெற உள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் ஜோதி ஓட்ட நிகழ்ச்சியிலும் மீராபாய் மற்றும் லவ்லினா பங்கேற்க உள்ளனர்.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, "இந்த பொறுப்பு இருவரின் சாதனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம். காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News