சோனம் வாங்சுக் – சமூக மாற்றத்திற்காக போராடும் புதுமையாளர்.
லடாக்கைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் மட்டுமல்லாமல் பல புதுமையான முயற்சிகளாலும் உலகளவில் கவனம் பெற்றவர்.
- பனிப்பாறைகளைப் போல செயல்படும் 'ஐஸ் ஸ்டூபா' தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.
- சூரிய ஆற்றலில் இயங்கும் ராணுவ கூடாரங்களை வடிவமைத்தார்.
- நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பல திட்டங்களை செயல்படுத்தினார்.
- நடைமுறை அனுபவத்தை மையமாகக் கொண்ட கல்வி முறையை ஊக்குவித்தார்.
- காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
- சமூக சேவைக்காக 2018ஆம் ஆண்டு ரமோன் மக்சேசே விருது பெற்றார்.
0
Leave a Reply