திருஷ்டி கழிக்க…..
திருஷ்டி கழிக்க பூசணிக்காய், கற்பூரம், எலுமிச்சை பழம், கல் உப்பு, மிளகாய் உள்ளிட்டவைகளில் சுத்தி போடுவது வழக்கம். அந்த வகையில் எரிந்த திரிகளை கொண்டும் சுத்தி போடலாம்.தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும் அல்லது வாரம் ஒருமுறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைக்க வேண்டும். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வைத்து இந்த திரிகளை பயன்படுத்தி திருஷ்டி சுத்த வேண்டும். இரவு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கச் செல்வதற்கு முன்பாக, திரிகளை தூபக் காலில் போட்டு, அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் எரிந்து சாம்பலாயிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை அளிக்கும்.
0
Leave a Reply