25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >> உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள். >> புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக் குழி திருவிழா கொடியேற்றம். >> ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >>


கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

2025 -ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 15.10.2024 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 16.10.2024 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 04.09.2024 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2024. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News