25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திராட்சைப் பழம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திராட்சைப் பழம் .

திராட்சை பழத்தில் வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கும் சரும அழகிற்கும் பெரிதும் உதவுகின்றன. இதை உட்கொள்வதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.குறிப்பாக, கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கின்றன.

 புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் பண்பு கொண்ட திராட்சை, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், சிறுநீரக செயல்பாட்டை சீராக்குவதுடன், இதிலுள்ள லிவோலியிக் அமிலம் முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி கூந்தல் உதிர்வை தடுக்கிறது. 

தினசரி உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.வெற்று வயிற்றில் சாப்பிடும்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த சுத்திகரிப்புக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறதுதிராட்சையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்துகள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News