25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உத்தரகாண்ட் மாநிலத்தில், தேசிய விளையாட்டு 38வது சீசன் விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உத்தரகாண்ட் மாநிலத்தில், தேசிய விளையாட்டு 38வது சீசன் விளையாட்டு போட்டிகள்

 துப்பாக்கி சுடுதல்  

ஆண்களுக்கான துப் பாக்கி சுடுதல் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் மகாராஷ்டிரா வின் பார்த் மானே, 252.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு மகா ராஷ்டிரா வீரர் ருத்ராங்க் ஷ் பாட்டீல் வெள்ளி, சர் வீசஸ் அணியின் கிரண் ஜாதவ் வெண்கலம் வென்றனர்.  

பளு தூக்குதல்  

ஆண்களுக்கான 73 கிலோ ட பளுதுாக்குதலில் தமிழகத்தின் அஜித் நாராயணா தங்கம் வென்றார். ஹரியானாவின் தீபக், சர்வீசஸ்  அணியின் லால்ஹுந்தாரா  முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 

பெண்களுக்கான பளுதுாக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில், மணிப்பூரின் பிந்தியாராணி தேவி பளுதுாக்கி இருந்தார். ஏற்கனவே 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் தேசிய சாதனை பிந்தியாராணியின் வசம் உள்ளது.

பெங்கால் வீராங்கனை ஷரபானி தாஸ் (187 கிலோ), மணிப்பூரின் நிலாம் தேவி (182 கிலோ) முறையே வெள்ளி, வெண் கலம் கைப்பற்றினர்.

நீச்சல் 

ஆண்களுக்கான நீச்சல் போட்டி 200 மீ., பேக் ஸ்டிரோக்' பிரிவில் தமிழகத்தின் நிதிக் (2 நிமிடம், 04.75 வினாடி) வெள்ளி வென்றார். மகாராஷ் டிராவி்ன் ரிஷாப் தாஸ் (2:03.34) தங்கம் கைப் பற்றினார். குஜராத் வீரர் தேவான்ஷ் (2:06.56) வெண்கலம் வென்றார். 

ஆண்களுக்கான 50 மீ., பிரீஸ்டைல்’ பிரிவில் தமிழகத்தின் ஜாஷுவா வெண்கலம் வென்றார். மகாராஷ்டிராவின் மிஹிர், கர்நாடகாவின் ஸ்ரீஹரி முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.

 கிரிக்கெட்  

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி நேற்று மஹாராஷ்டி ராவில் உள்ள புனே மைதானத்தில் நடந்தது..

இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னுக்கு  ஆல் அவுட்டாகி தோற்றது. 

இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. 

டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டில்லியில் இன்று துவங்கும் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்றில் சசிகுமார், ராம்குமார் இடம் பெற்றுள்ள இந்திய அணி, டோகோ அணியை சந்திக்கிறது.   

பாட்மின்டன்

இந்தியாவின் ஸ்ரீகாந்த்தாய்லாந்து மாஸ்டர்ஸ் காலிறுதியில் 17-21, 16-21 என ஜெங் ஜிங் வாங்கிடம் வீழ்ந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி தோல்வி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News