களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (30.12.2025) வழங்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் 'நல்லோசை களமாடு' பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.
அதன்படி, மாவட்டத்தில், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, இசைக் கருவி இசைத்தல், ஓரங்க நாடகம், ஓவியம், பிரசுரங்கள் உருவாக்குதல், கவிதை, கதை எழுதுதல், கேரம், சதுரங்கம், குழு விளையாட்டுப் போட்டிகளாக பூப்பந்து, கைப்பந்தாட்டம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.அதன்படி, களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் (30.12.2025) வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சாந்தி, அரசு அலுவலர்கள், சமூக நீதி விடுதிகளைச் சேர்ந்த 186 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply