கிருஷ்ணரின் பாத ரகசியம்'
பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில்பாதங்களை தரிசித்த பிறகு தான், முகத்தை தரிசிக்க வேண்டும் என்பார்கள். அதாவது, இறைவனின் திருவடியை அடைவதே இந்த பிறவியின் நோக்கம் என்பதை உணர்த்தவே இப்படி சொல்லப்படுகிறது. இதற்குள் பலரும் அறியாத மற்றொரு ரகசியமும் உள்ளது. கிருஷ்ணரின் பாதங்களை தாமரை பாதங்கள் என்பார்கள். தாமரை, சேற்றில் முனைத்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் மேலே உயர்ந்து நிற்கும். அது போல உலக இன்பங்களாக சேற்றை விட கிருஷ்ணரின் கருணை உயர்ந்தது என காட்டுதாகும்.
கிருஷ்ணரின் அனைத்து புனித சின்னங்களும் கிருஷ்ணரின் திருவடிகளில் உள்ளது. சங்கு, சக்கரம், வில், ஸ்வஸ்திக், தாமரை பிறை சந்திரன், மீனம் வஜ்ராயுதம் உள்ளிட்ட பலவிதமான ஆயுத சின்னங்கள் உள்ளன. இவைகள் இருக்கும் இடத்தில் அனைத்து விதமான நன்மைகளும் பெருகும். தீமைகள் எதுவும் நெருங்காமல் பக்தர்களை காக்கும். இது தான் கிருஷ்ணரின் பாதத்தை தரிசிப்பதற்கும் பாதங்களை வீடுகளில் வரைவதற்கு, வைத்து வணங்குவதற்குமான காரணம்.
0
Leave a Reply