உலகின் மிகச்சிறிய பறவை பீ ஹம்மிங்பேர்ட்.
கரீபியன் கடல் பகுதி தீவு நாடான கியூபாவில், உள்ள இப்பறவைகள் ,உலகின்மிகச் சிறிய பறவை, பீ ஹம்மிங்பேர்ட். தமிழில், தேனீ ஓசனிச்சிட்டுஎனப்படுகிறது.
இது, 6 செ.மீ., நீளமும், 2 கிராம் எடையும் உடையது. இந்த பறவையின் இதயம், நிமிடத்துக்கு 1,260 முறை துடிக்கும். பறக்கும் போது, ஒரு நொடிக்கு, 80 முறை இறக்கைகளைஅடித்துக் கொள்ளும். தேன் எடுப்பதற்கு வசதியாக, இப்பறவைக்கு நீண்ட, மெல்லிய அலகு உள்ளது. இது, மலர்களுக்கு நேராக பறந்து நின்றபடி, தேனை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இப்பறவை சிலந்தி, ஈ, மகரந்ததுகளையும் உண்ணும். இதன் உடல் வண்ண மயமான, நிறங்களில் ஜொலிக்கும்.
மென்மையான தாவர இலைகளில், 2.5 செ.மீ., அளவில், மிகச்சிறிதாக கூடு கட்டும். இந்த இனத்தில், பெண் பறவைகள் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். இதன்முட்டை, பட்டாணி விதையை விட, சற்று பெரியது. பெண் பறவை தனியாக அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.
0
Leave a Reply