25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெற உள்ளது

விருதுநகர் மாவட்டம், மூன்றாவது புத்தகத் திருவிழா 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக துவங்குகிறது. புத்தக திருவிழாவில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கவிஞர்கள் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். பல்வேறு துறைகள் சார்ந்து கண்களையும், சிந்தையையும் கவரும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

 ஏற்கனவே அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாணவர்கள் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் பொருட்டும் புத்தகங்கள் வாங்கும் எண்ணத்தை வளர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தக உண்டியல்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகத் திருவிழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாது கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 மேலும் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்கள் வாங்கும் மாணவச் செல்வங்களுக்கு 20 விழுக்காடு புத்தக விலையில் தள்ளுபடி வழங்கப்படும். எண்ணற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தவறாது கலந்து கொள்ள செய்து புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தினை மேம்படுத்துவதற்கு மற்றும் அவர்கள் கல்வியில் மேம்பாடு அடையுமாறு செய்வதற்கு தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

 புத்தகத் திருவிழாவில் உணவு அரங்குகள் மற்றும் சிற்றுண்டி அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக அமைத்திட அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுடன் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News