மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.
மலேசியாவில், பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்ட) நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, நைஜீரியா அணிகள் மோதின. மழை, ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக தலா 13 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப் பட்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. நைஜீரியா அணிக்கு லில்லியன் உதே (18), கேப்டன் லக்கி பியட்டி (19) ஓரளவு கைகொடுத் தனர். 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது.
.நியூசிலாந்து அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 63 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந் தது. இத்தொடரில் அறிமுகமான முதல் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.ஆட்ட நாயகி விருதை நைஜீரியாவின் லக்கி பியட்டி கைப்பற்றினார்.
0
Leave a Reply