முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 49 குழுக்கள் அமைக்கப்பட்டு 13.04.2026 முதல் 17.04.2026 வரை வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறவுள்ளனர் - மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே படிவம் 12D-இல்இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 330 மூத்த வாக்காளர்கள் மற்றும் 240 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும்,திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 357 மூத்த வாக்காளர்கள் மற்றும் 358 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 306 மூத்த வாக்காளர்கள் மற்றும் 214 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும்,
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 224 மூத்த வாக்காளர்கள் மற்றும் 177 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 318 மூத்த வாக்காளர்கள் மற்றும் 310 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 303 மூத்த வாக்காளர்கள் மற்றும் 252 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும்,
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 170 மூத்த வாக்காளர்கள் மற்றும் 294 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என 7 சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2008 மூத்த குடிமக்கள், 1845 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.
மேற்படி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்குப்பதிவு அலுவலர் தலைமையின் கீழ் நுண்பார்வையாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு 10, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 10, சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 5, சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 5, விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு 6, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 7, திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு 6 என மொத்தம் 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் நாளை 2026 ஏப்ரல் 13 முதல் 17 வரை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே வாக்குகள் செலுத்தலாம். படிவம் 12D-இல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது.
எனவே, தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் வாக்களிக்க ஏதுவாக வீட்டிலேயே இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply