விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டாரத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாம் நடைபெறவுள்ளது .
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், ‘காரியாபட்டி வட்டத்தில்“ உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டமானது 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 16.07.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, காரியாபட்டி வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, 15.07.2026 அன்று மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகளைக்; கேட்பதும், மாலை 06.00 மணி முதல் மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.
மேலும், அன்றைய தினம் நடைபெறும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே காரியாபட்டி வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0
Leave a Reply