₹85 கோடிக்கு ஏலமான அரிய கைக்கடிகாரம்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில், உலகின் அரிய மற்றும் உயர்ந்த மதிப்புள்ள கைக்கடிகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் படேக் பிலிப் நிறுவனத்தின் 'சவுத் அமெரிக்கா' வேர்ல்ட் டைம் மாடல் சுமார் 10.2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹85 கோடி) விலைக்கு விற்பனையாகி கவனம் பெற்றுள்ளது.
1953-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 'ரெஃபரன்ஸ் 2523' மாடலான இந்தக் கடிகாரத்தின் சிறப்பம்சம், அதன் எனாமல் டயலில் தென் அமெரிக்காவின் வரைபடம் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இவ்வகை கடிகாரங்கள் தற்போது உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால், சேகரிப்பாளர்களிடையே அதிக மதிப்பைப் பெற்றுள்ளது. மேலும், ஏலத்தில் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்பனையான மூன்றாவது வின்டேஜ் கைக்கடிகாரம் என்ற பெருமையையும் இந்த மாடல் பெற்றுள்ளது.
0
Leave a Reply