25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்.

யூத் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தான்வி பத்ரி படைத்துள்ளார்.

செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சீனாவின் இஜின் ஜங்கை எதிர்கொண்ட தான்வி பத்ரி, 21-15, 13-21, 24-26 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவின் தினிதி தேசிங்கு 2:02.28 நிமிடங்களில் இலக்கை எட்டி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒரே யூத் ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் இந்தியாவின் திர்தாங்க் பெகு 2:01.25 நிமிடங்களில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.இதுவரை இந்தியா இத்தொடரில் 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News