தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கள ஆய்வு மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் தருணங்களில், அக்குழந்தைகளுக்கு முறையாக ஆலோசனை வழங்கி அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றுப்படுத்துநர்கள் கட்டாயம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பள்ளி படிப்பினை இடைநிறுத்தம் செய்த குழந்தைகள் தான் சட்டத்திற்கு முரணான குழந்தைகளும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறும் சூழ்நிலைகள் உள்ளதால் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 2014-ன்கீழ் மாவட்டத்தில் பள்ளிகளின்கீழ் செயல்படும் பள்ளி விடுதிகள் அனைத்து பதிவு மற்றும் உரிமச்சான்று பெற்று இருக்கவேண்டும். அவ்விடுதியினை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நலஅலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியப்படும் பட்சத்தில், அக்குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராகும் வகையில் ஆணை பிறப்பித்து ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மனவள ஆலோசனைகள் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, விருதுநகரில் செயல்பட்டு சரஸ்வதியம்மாள் லையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பென்டகன் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் திருமதி ஆர்.ஜெயசுதா மற்றும் திருமதி உஷா நந்தினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.திலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply