எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026 - னை முன்னிட்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி.
விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (02.03.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026 - னை முன்னிட்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை (SVEEP) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா., I A S ., அவர்கள் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 01.01.2026 - ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026- மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அனைவரது பங்களிப்பினை உறுதி செய்திடவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் “இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் நிலையான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, சமூகம் மொழி அல்லது எந்த தூண்டுதலாலும் பாதிக்கப்படாமல் வாக்களிக்கவும் இதன் மூலம் உறுதியளிக்கிறோம்.”என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள், கிராமப்புற செவிலியர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஏற்றுக்கொண்டார்.
மேலும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப் மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தப்பாட்டம் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, "எனது வாக்கு, எனது மாவட்டம், எனது பொறுப்பு" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதல் கையெழுத்திட்டுப் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், வட்டாட்சியர்( தேர்தல்) திரு.சீனிவாசன், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply