ஏப்ரல் 23 - சட்டமன்றத் பொதுத்தேர்தல் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை விதிமீறும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்கக் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வாக்களிக்க ஏதுவாக விடுமுறை:
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தேர்தல் நாளன்று தங்குதடையின்றி வாக்களிக்க ஏதுவாக, 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல்:
அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புகார் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறை:
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
தொலைபேசி எண்கள்: 04562-294067, 04562-294068, 04562-294069
கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll Free): 1800 425 2166
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply