ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள்.
சீனாவில் நடைபெற்று வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று மட்டும் இந்தியா மூன்று வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.
பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் புமேஷ்வொரி தேவி 2:10.20 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் ஜோன் பிபி தங்கமும், ஜப்பானின் குருமி வெள்ளியும் கைப்பற்றினர். இந்தியாவின் வைஷ்ணவி ஐந்தாவது இடத்தில் நிறைவு செய்தார்.
ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் ஷகீல் 1:48.78 நிமிடங்களில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும், ஆண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் அபே சிங் 20.96 வினாடிகளில் பந்தயத்தை முடித்து இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை சேர்த்தார்.
இந்த தொடரில் இதுவரை இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
0
Leave a Reply