சென்னையில் முதல் முறையாக 'பிக் பாஷ் லீக்' போட்டி.
ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' 2011 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 16வது சீசன் வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீசுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார். அப்போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கையும் சந்தித்தார்.
அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, 'பிக் பாஷ் லீக்' 16வது சீசனின் தொடக்கப் போட்டி டிசம்பர் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதன் மூலம், வெளிநாட்டு பிரான்சைஸ் டி20 லீக் தொடரின் அதிகாரப்பூர்வ போட்டி ஒன்று இந்தியாவில், அதுவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், முதல் முறையாக நடைபெற உள்ளது.
0
Leave a Reply