வாழைப்பூ பிரியாணி.
தேவையான பொருட்கள் -
அரிசி: 1.5 கப் (ஊற வைத்தது)
வாழைப்பூ: 1 கப் (நரம்பு நீக்கி நறுக்கியது)
வெங்காயம்: 2 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது: 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்: 2
மசாலா தூள்: மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா
தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
மல்லி-புதினா: சிறிதளவு
செய்முறை -
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாழைப்பூவை மோரில் சிறிது நேரம் வைத்து பிறகு எண்ணெயில் லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிப்புப் பொருட்களை சேர்த்து, வெங்காயம் மற்றும் பச்சை
மிளகாய் வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து மசாலாப் பொடிகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வதக்கிய வாழைப்பூ, புதினா, மல்லி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை
போடவும்.
மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி 1 விசில் விட்டு எடுக்கவும். வாழைப்பூ பிரியாணி தயார்.
0
Leave a Reply