பீட்ரூட் சட்னி
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 கப் ( துருவியது),தேங்காய் - 1/2 கப்,எண்ணெய் - 1 1/2 tbs,உளுந்தம் பருப்பு - 1 1/2 tbs,
கடலை பருப்பு - 2 tbs, சிவப்பு மிளகாய் - 3,பெருங்காயம் - ஒரு சிட்டிகை,இஞ்சி - 1/2 துண்டு,
புளி - சின்ன நெல்லிக்காய் சைஸ், கறிவேப்பிலை - ரெண்டு கீற்று, உப்பு, எண்ணெய் - 1/2 டேபிள்ஸ், கடுகு - 1 tbs
தாளிக்க:
எண்ணெய் – ½ டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிது, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய சூடாக்கி, கடலை பருப்பு, உளுந்த பருப்பு, பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். பருப்பு பொன்னிரமா மாறியதும் புளி, இஞ்சி சேர்த்து சில நொடிகள் வதக்கி, அடுப்பை அணைக்கவும்.
வாணலியில் இருந்து இறக்கி ஆற விடவும். அதே வாணலியில் துருவிய பீட்ரூட் கறிவேப்பிலை சேத்து மிதமான தீயில், பீட்ரூட்டின் பச்சைத்தன்மை போகும் வரை அவ்வப்போது கிளறி விட்டுட்டே இருங்க.
நல்லா வதங்கியது அதை ஒரு தட்டிற்கு மாத்தி சூடு ஆற விடுங்க.
சூடு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாத்தி நல்லா கொரகொரப்பாக சட்னி பதத்துக்கு அரச்சு எடுத்துக்கோங்க. அதை ஒரு கிண்ணதுக்கு மாத்தி தனியாக வைத்து கொள்ளவும்.
இப்போது தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு கறிவேப்பிலை பெருங்காயம் எல்லாம் போட்டு சட்னியின் மேல் போடவும்.
இந்த பீட்ரூட் சட்னி சூடான இட்லி, தோசை, பணியாரம், வெண் பொங்கல், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது.
ரொட்டி, சப்பாத்தி, புல்கா போன்றவற்றுடன் சைடு டிஷாகவும் பரிமாறலாம்.மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு இந்த சட்னி வித்தியாசமான சுவையை தரும்.
0
Leave a Reply